Tuesday, July 26, 2016

உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?


உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது

உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி. “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள்,

யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.

அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”
🐅அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர்,

அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்

மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது.

அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும் அன்பு. அன்புதான் இறைவன்.

அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி.

இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.

அன்பே சிவம்.!

(வாழ்க்கை வாழ்வதற்கே)

Wednesday, November 4, 2015

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது...


ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப்  பிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்...

 ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.

ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்...

" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.
கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
" மகிழ வைத்து மகிழுங்கள்..
உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்"

அன்று அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்...

 

அன்று அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார்.

சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத்துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.

இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் இலேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்து பார்த்தான்.
கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான்.
சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.
"இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான் மகன்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.


கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.


”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Monday, September 14, 2015

ஆழமான மேற்கோள்கள்...

 
🚩🚩தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-பகவத் கீதை


🚩🚩யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
-கண்ணதாசன்


🚩🚩வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
- A .P . J . அப்துல்கலாம்


🚩🚩ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
-ஹிட்லர்


🚩🚩அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
-A .R . ரகுமான்


🚩🚩தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
-நெப்போலியன்


🚩🚩கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
-புத்தர்


🚩🚩விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
-காரல் மாக்ஸ்


🚩🚩வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
-பில்கேட்ஸ்


🚩🚩வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
-விவேகானந்தர்


🚩🚩நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
-விவேகானந்தர் 


🚩🚩தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
-ஸ்ரீ கிருஷ்ணர்


🚩🚩பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-சார்லி சாப்பிளின்


🚩🚩உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
-பெயர் தெரியாத பெரியவன்


🚩🚩வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
-பெயர் தெரியாத பெரியவன்


🚩🚩சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
-பெயர் தெரியாத பெரியவன்


🌹🌹பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
-விவேகானந்தர்


💚💚எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
-விவேகானந்தர்

Sunday, September 13, 2015

கடவுள் இருக்கிறாரா ?


ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.

கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

"உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர், "அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."

"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

"அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.