Tuesday, September 30, 2014

மனைவியை வெல்லும் மந்திரங்கள்

ஆண்களே உங்களுக்குத் தான்
மனைவியை வெல்லும் மந்திரங்கள் – 10

1. அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.

2. அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.

3. சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.

4. சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.
5. வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.

6. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.

7. எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.

8. சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

9. எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

10. எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.

10 திருமணப் பொருத்தம்

10 திருமணப் பொருத்தம்
  1. தினப்பொருத்தம்
  2. கணப்பொருத்தம்
  3. மகேந்திரப்பொருத்தம்
  4. ஸ்திரி பொருத்தம்
  5. யோனி பொருத்தம்
  6. ராசி பொருத்தம்
  7. ராசி அதிபதி பொருத்தம்
  8. வசிய பொருத்தம்
  9. ரஜ்ஜிப்பொருத்தம்
  10. வேதைப்பொருத்தம்

1. தினப் பொருத்தம் 

ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று.

2. கணப் பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.

கணம் என்றால் கூட்டம் என பொருள்படும். மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களும் பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகம், ஒற்றுமை இவை தீர்மானிக்கப்படும். தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.

3. மகேந்திரப் பொருத்தம் 

திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.

புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார். .

4. ஸ்திரீ தீர்க்கம் 

திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்

5. யோனிப் பொருத்தம்

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆ& பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண்&பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.

7. ராசி அதிபதி பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.

பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.

8. வசியப் பொருத்தம்

கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.

இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாகும்.

9. ரஜ்ஜுப் பொருத்தம் 

தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

சரசோதிமலை எனும் தமிழ் ஜோதிட காவியம் இவ்வித பத்து பொருத்தங்களினால் உண்டாகும் பலன் எவை என குறிப்பிடும் சமயம் "இரச்சுமங்கலியங்" என தெளிவாக சொல்கிறது. இவ்விருவர் இணைவால் உண்டாகும் திருமண வாழ்வின் நீண்ட, மத்திம குறுகிய ஆயுளை ரச்சு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டு புற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். இந்த சாஸ்திரத்தின் படி, மிகவும் புனிதமாக ஏற்கப்பட்டுள்ள திருமாங்கல்ய கயிறு&அதன் ஆயுளை தீர்மானிப்பதால் இது முக்கியமாக ஏற்கப்படுகிறது. ஏனைய பொருத்தம் அமைந்த இந்த ரச்சு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.

10. வேதைப் பொருத்தம்

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுயி கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.

Sunday, September 21, 2014

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு!

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்

Wednesday, September 17, 2014

பேச்சின் சிறப்பு



அதிகமாய் பேசினால்,
குணத்தை இழப்பாய்!

வேகமாய் பேசினால்,
அர்த்தத்தை இழப்பாய்!

வெட்டியாய் பேசினால்,
வேலையை இழப்பாய்!

அதிகமாய் பேசினால்,
அமைதியை இழப்பாய்!

ஆனவமாய் பேசினால்,
அன்பை இழப்பாய்!

சிந்தித்து பேசினால்,
சிறப்போடு வாழ்வாய்!!!

சர்க்கரை ஒரு வெள்ளை விஷம்!!!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

ஒவ்வொரு நொடியும் வாழ்!

 
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான்.
அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம்
நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய
பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது.........
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........
உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப்
பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........
காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று
எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன்,
நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
* ஒவ்வொரு நொடியும் வாழ்
* உன்னுடைய வாழ்க்கையை வாழ் மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
* அது மட்டுமே நிரந்தரம்.......
* உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது.............


Curtsy: dinakaran daily newspaper

Sunday, September 7, 2014

விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை!

விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை!

இன்று அரசியலிலும், சமுக வலை தளங்கலிலும் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே ஆகும்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார்.

சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது.
சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை.

இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை”
என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார்.

திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட
கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண்
பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம்.

ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர்
படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும்
பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ்
மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான். இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற
ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும்
அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும்
பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும்
காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை.

இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும்
கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது.

இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார்.

இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த
கிராமப்புற மாணவர்கள் அதிகம்.

இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள்
விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.

விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை...

படிப்பது அவர்கள் விருப்பம் !!!

படிப்பது அவர்கள் விருப்பம் !!!


குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து,
"டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,'' என்று கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரு வீட்டில் இருந்த கோழியை திறமைசாலியென நினைத்த மரங்கொத்தி, வாத்து, குயில் ஆகியவை அதனிடம் பாடம் படிக்க வந்தன.

ஒருமுறை, அவை பயிற்சிக்காக வெளியே கிளம்பின. செல்லும் வழியில் கோழியிடம் குயில், "களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடட்டுமா!'' என்றது.

"ஐயையோ வேண்டாம்! பாடினால் தொண்டை கட்டிக்கொள்ளும். பிறகு உன் அம்மாவிடம் என்னால் பதில் சொல்ல முடியாது,'' என்றது.

அவை ஒரு ஆற்றங்கரையை அடைந்தன. வாத்து கோழியிடம்,"எனக்கு நன்றாய் நீந்தத் தெரியும்! நான் இதில் நீந்தட்டுமா?'' என்றது.

''சரியாப் போச்சு! தண்ணி உன்னை அடிச்சுட்டு போயிட்டா, உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது! கப்சிப்! பேசாமல் என்னுடன் வா,'' என கண்டித்தது.

மரங்கொத்தி கோழியிடம், "நீங்க குயிலிடமும், வாத்திடமும் சொன்னது வாஸ்தவம் தான்.. ஆனால், நான் என் அலகால் இந்த மரத்திலுள்ள புழுக்களைக் கொத்திப் போடுகிறேன். எல்லாரும் விருந்துண்ணலாமே!'' என்றது.

"அதுவும் வேண்டாம்'' என்ற கோழி, " மரத்தில் கொத்தும் போது, உன் அழகான அலகு உடைஞ்சு போனா, அதுக்கு யார் பொறுப்பு?'' என்றது.

அந்தந்த பறவைகள் அதனதன் சுபாவத்தில், திறமை வாய்ந்தவையாக இருந்தும், கோழி தன்னைப் போலவே அவற்றையும் நினைத்துக் கொண்டதால், அதனதன் துறையில் மிளிர விடாமல் தடுத்து விட்டது.

இந்தக் கோழியைப் போல் இல்லாமல், அவரவருக்கு விருப்பமான துறையில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

அழகான உவமைகள்!

பழி!
நேரத்தை நீ கொன்றால்,
நேரம் உன்னைக் கொல்லும்!

விமர்சனம்
உங்கள் மீது வெளிச்சம் விழ விழ, உங்கள்
நிழழும் அதிக கறுப்பாகத்தான் செய்யும்!

நுணலும்...
நீங்கள் யார் மீதாவது பழி போட்டால், அந்தச் காரியத்தைச்
செய்துமுடிக்கத் தகுதியானவர் உங்களைவிட அவர்தான் என்று
நீங்களே ஒப்புக்கொண்டதாக அத்தம்!

நீ நீயாக..!
நீங்கள் உங்களை மாதிரி இருங்கள்: மற்றவர்கள் மாதிரி
இருக்க மற்றவர்கள் இருக்கிறார்கள்!

சூடு!
உண்மை சுடாது, வெளிப்படும்
தப்புதான் சுடுகிறது!