Saturday, November 29, 2014

ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )


ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )


ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தvலை கொடுத்து வாங்காதிங்க !

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.
ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.

யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?
ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன் படுத்தலாம். இதை தானே நம்ம தாத்தா பாட்டி பயன்படுத்தினாங்க.

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே!

நான் : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?..

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க..

ஆரோகியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோக படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு, உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..
எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம்.

அது எப்படி ?

நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!. அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன் வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாபிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

மேலும் அவர்கள் எதை தயாரிகிறார்களோ, அதை ஆஹா ஓஹோ என்று தான் விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன் படுத்தினால் கேன்சர் வராது என்று சொல்லி தான் விற்பார்கள். அனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்க வேண்டும்.

நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன் படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று! அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசை படுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.

இனிமேலும் நாம் ஏமாறினால் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம். ஏனெனில் வரும் காலம் இன்று நாம் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என்று நம் குழந்தைகளுக்கு மெல்ல சாகும் விசத்தை கொடுக்காதீர்கள்!!!!

Thursday, November 27, 2014

ஓட்டை சட்டி...

 
ஓர் உழவருக்கு மலை மீது வீடு இருந்தது. அவர் ஒரு குச்சியின் இரு முனைகளிலும் இரு பானைகளைக் கட்டி தினமும் கீழே சென்று தண்ணீர் எடுத்து வருவது வழக்கம்.

ஒரு நாள் ஒரு பானையில் மட்டும் ஓட்டை விழுந்துவிட்டது. இதனால் ஒரு பானையில் தண்ணீர் முழுமையாக கொண்டுசெல்ல முடியவில்லை. அதற்காக அந்தப் பானையை மாற்றவில்லை. அதையே பயன்படுத்தி வந்தான்.

ஒரு நாள் அந்தப் பானை உழவனரப் பார்த்து, 'என்னால் உன் நேரமும் உழைப்பும் வீணாகிறது. என்னால் நீ முழுமையாகத் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை’ என்று சொன்னது. அதற்கு அந்த உழவன். 'நீ பழுதாகிவிட்டாய் என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. வழியை மட்டுமே மாற்றினேன். அதனால் நான் வந்த வழி நெடுகப் பார்... உன்னால் எவ்வளவு புற்கள், செடி, கொடிகள் செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்குகின்றன’ என்று அந்தப் பானையிடம் சொன்னார்.

பானை மகிழ்ச்சியடைந்தது...

Wednesday, November 19, 2014

நிலக்கடலை


நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
நன்றி...Kumar Duraiswamy

ஆன்மா - ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.

அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.

ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.

பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.

ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.

எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.

அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.

அவளோ நீயோ சாகப்போகிறாய்.

நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.

அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’

நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.

உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.

நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.

நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.

நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.

அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.

அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.

நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

-------------------------------------------------------------------------------------

தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Courtesy from: http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/

Monday, November 3, 2014

ஆண் vs பெண் அன்பு

அன்பு

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ......


அனுபவம் பேசுகிறது !!!!