Tuesday, May 13, 2014

குடிகாரனும் அவன் குடிப்பழக்கமும்....

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.

தற்கு ஞானி, "நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.

No comments:

Post a Comment