Tuesday, May 27, 2014

அறிவு

உங்களுக்கு தெரியாததை
தெரியாது என ஒப்புக் கொள்வதற்கு
பெயர் தான்...

அறிவு...

Wednesday, May 21, 2014

ஜெய்சங்கர் - உயர்ந்த உள்ளம்


தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசேஷமென்றாலும், அதை ஆதரவற்றோர், அநாதை இல்லங் களில் கொண்டாடுகிற வழக்கம் ஜெய்சங்கருக்கு உண்டு. அநாதைக் குழந்தைகளுக்கான விருந்தைப் பிரபலமானவர்கள் கையால் பரிமாற வைப்பாராம்.

''எல்லாச் செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் அவங்க கையால தரச் சொல்றீங்க?'' என்று ஒரு நண்பர் கேட்டபோது, 

''நான் கூப்பிட்டு வர்ற வி.ஐ.பி-க் கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு இதுவரைக்கும் வந்திருக்க மாட்டாங்க. அதனால, இது ஒரு வாய்ப்பா இருந்து, இந்த உதவி அவங்கள்ல சிலர் மனசைத் தொட்டாக்கூடப் போதும்... நாளைக்கு அவங்களும் இதுமாதிரி உதவிக ளைச் செய்ய என் முயற்சி ஒரு தூண்டுதலா அமையும் இல்லியா, அதுக்காகத்தான்!'' என்றாராம் ஜெய்சங்கர்
Courtesy: Vikatan EMagazine

Sunday, May 18, 2014

அப்பா


உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த
ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற
பட்டியலில்
இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட
பாவப்பட்ட ஜீவன்.

மனைவி கரு சுமக்க துவங்கிய நாள்
முதல், தன் குழந்தை பற்றிய
கனவுகளை சேமிக்க தொடங்கிய
பொறுப்புள்ள தந்தை.

குழந்தைகளின்
வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக
எப்படிபட்ட அவமானங்களையும்
சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.
மகன், மகள் இன்றையத் தேவைகளைவிட
வருங்காலத் தேவைகளை மனதுக்குள்
கணக்குப் போட்டு அதற்காகத் தன்
சுகங்களை ஆரம்ப நாட்களில்
இருந்தே தியாகம் செய்யும் புனித
உள்ளம் படைத்தவர்.

மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும்
ஆனந்த கண்ணீரில்
மனதுக்குள்ளேயே கூத்தாடும்
பாசமிக்க உயிர்.

தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் உயர்
கல்விக்காகவும்
குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு
பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம்
அனுப்பி,மற்றும் வேலை பார்க்கும்
இடங்களில் மேலதிகாரிகளால்
அவமானப்பட்டாலும் குழந்தைகளின்
கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல்
அந்த கஷ்டங்களை சகித்துக் கொள்ளும்
தன்னலமற்றவர்.

மகனுக்கும் மகளுக்கும் அவர்கள்
சம்பாதிக்கும்வரை ATM ஆக இருப்பவர்.

ஒரு வானொலி பேட்டியில் நாகேஷ்

 
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!